Arrest: 31 தமிழக மீனவர்கள் கைது… மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…!

tamilnadu cm mk stalin

இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 31 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். அவர்களை மீட்கக் கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் 31 மீனவர்கள் அக்டோபர் 31-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் இரவு இந்திய எல்லை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை சுற்றிவளைத்து, இலங்கை எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்ததாகக் கூறி, 31 மீனவர்களையும் கைது செய்தனர். 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்; நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களது 3 இயந்திரமயமாக்கப்பட்ட படகுகளையும் சிறைபிடித்துள்ள இலங்கை கடற்படையினர், அதே நாளில், மற்றொரு சம்பவத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்களையும், அவர்களது நாட்டுப் படகையும் சிறைபிடித்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 114 மீனவர்களும், 247 படகுகளும் இலங்கை வசம் இருக்கிறது. எனவே, இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிக்க உடனடியாக தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Vignesh

Next Post

அடுத்த 5 ஆண்டுகளில் பூமி ஒரு நெருப்பு பந்தாக மாறும்!. வெப்பநிலை வேகமாக உயரும்!. WMO ஷாக் ரிப்போர்ட்!

Tue Nov 4 , 2025
2025 மற்றும் 2029 க்கு இடையில் பூமியின் வெப்பநிலை 1.5°C க்கு மேல் உயரக்கூடும் என்று உலக வானிலை அமைப்பு (WMO) அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. தற்போது வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருகிறது. புவி வெப்பமடைதல் தான் இதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது. இதற்கிடையில், உலக வானிலை அமைப்பின் (WMO) அறிக்கை ஒரு திடுக்கிடும் கண்டுபிடிப்பை வெளிப்படுத்தியுள்ளது. அதன் படி, 2025 மற்றும் 2029 க்கு இடையில் பூமியின் சராசரி […]
WMO earth temperature

You May Like