தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் அளித்த பேட்டியில், தேர்தல் பணிகளை சீராக நடத்துவதற்காக மாநிலம் முழுவதும் 3.60 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 83 ஆயிரம் போலீஸ் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கூடுதலாக, 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 5949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு எந்த விதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
வாக்குச்சாவடிகளில் ஒழுங்கை பேணும் வகையில், செல்போன்கள் உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை. வாக்கு எண்ணும் பணிக்காக, தமிழ்நாடு முழுவதும் 62 இடங்களில் எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். தபால் வாக்குகள் குறித்து பேசும்போது, தற்போது வரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
அதேபோல், இந்த தேர்தலில் 14.59 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வாக்காளர்களுக்கு வழங்கப்படவிருந்ததாக கூறப்படும் ₹543 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
Read more: டேங்கர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி கோர விபத்து.. 20 பேரின் நிலை என்ன..? கோவில்பட்டியில் கோரம்..



