பட்டுக்கோட்டையில் 4 அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர். பட்டுக்கோட்டை 31வது வார்டு கவுன்சிலர் குமணன், 4வது வார்டு கவுன்சிலர் ஜெயராமன், 28வது வார்டு கவுன்சிலர் லதா ஆண்ட்ரூஸ், 20வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 4 அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர். பட்டுக்கோட்டை 31வது வார்டு கவுன்சிலர் குமணன், 4வது வார்டு கவுன்சிலர் ஜெயராமன், 28வது வார்டு கவுன்சிலர் லதா ஆண்ட்ரூஸ், 20வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். இந்த நிலையில் திமுகவில் சேர்ந்த நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்: அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டு, கட்டுப்பாட்டை மீறி, களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால், தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த, பட்டுக்கோட்டை நகர 31-வது வார்டு அதிமுக செயாளர், கவுன்சிலர் ஆர்.கே.குமணன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார். அதிமுகவினர் யாரும் இவருடன் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என தெரிவித்துள்ளார்.