2026 சட்டசபை தேர்தலுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. இதையொட்டி திமுக, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தவெக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. திமுக கூட்டணியில் ஏற்கனவே பல கட்சிகள் உள்ள நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு முதல்வர் ஸ்டாலின் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்டு வருவது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் லேசாக சலசலப்பு எழத் தொடங்கி இருக்கிறது. அதாவது திமுகவுடன் பல ஆண்டுகள் கூட்டணியில் இருக்கும் நிலையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் எனக் கோரிக்கையை சில தலைவர்கள் எழுப்பி வருகின்றனர்.
பல ஆண்டுகளாகவே இந்தக் கோரிக்கை காங்கிரஸ் கட்சியில் இருக்கும் நிலையில் இந்தத் தேர்தலில் சற்று அழுத்தமாகவே தங்கள் குரலைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆட்சியில் பங்கு என காங்கிரஸ் அடம் பிடித்து வரும் நிலையில் நான்கு அமைச்சர் பதவி நிபந்தனையுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் டெல்லி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பீகார் தேர்தல் முடிந்ததும் ராகுல் காந்தி தமிழகத்தில் நேரடியாக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளாராம். அவருடைய தலைமையில் வருகின்ற ஜனவரியில் மூன்று லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாடு நடத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படியான சூழலில் ஸ்டாலின் என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்தே பார்க்கலாம்.
Read more: “சமரசமே கிடையாது.. கோர்ட்ல பாத்துக்கலாம்”..!! மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!