ஐய்யோ.. அம்மா.. வலி தாங்க முடியலையே..! உடலில் தீவைத்துக் கொண்ட 6ம் வகுப்பு மாணவன்..! தஞ்சையில் பேரதிர்ச்சி..!

death n

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியை சேர்ந்த 6ஆம் வகுப்பு பள்ளி மாணவர் ஒருவர், கடுமையான வயிற்று வலி தாங்க முடியாமல் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சம்பந்தப்பட்ட சிறுவன் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து தீவிர வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த அந்த மாணவர், இன்று வீட்டில் இருந்த நேரத்தில் வலியின் வேதனை தாங்க முடியாமல் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார்.

தீப்பற்றி எரிந்ததில் சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக தீயை அணைத்து பலத்த தீக்காயங்களுடன் இருந்த மாணவரை மீட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக பட்டீஸ்வரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : சாக்கு மூட்டையில் சடலமாக கிடந்த காதலன்..!! 20 நாட்களாக காதலிக்கு போன மெசேஜ்..!! திடுக்கிட வைக்கும் படுகொலை சம்பவம்..!!

Next Post

திங்கள் முதல் ஞாயிறு வரை..! எந்த நாளில் எந்த கடவுளை வணங்க வேண்டும்? என்ன பலன்கள் கிடைக்கும்?

Sun Sep 6 , 2026
இந்திய கலாச்சாரத்திலும் இந்து ஆன்மிக நெறியிலும் வாரத்தின் 7 நாட்களும் குறிப்பிட்ட தெய்வங்களுக்கு உரிய நாட்களாக வகுக்கப்பட்டு, அதற்கேற்ப விரதமிருந்து வழிபடும் மரபு காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஆன்மிக வழிகாட்டல் மன அமைதியைத் தருவதுடன், வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலையும் நன்மைகளையும் பலமடங்கு அதிகரிக்க உதவுகிறது. வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உரிய நாளாகும். இந்நாளில் சோமவார விரதமிருந்து ஈசனை மனமுருகி வழிபடுவது குடும்பத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் […]
Amman God 2026

You May Like