பள்ளியின் அருகே செயல்பட்ட விபசார விடுதிகள்; கமிஷ்னர் எடுத்த அதிரடி நடவடிக்கை..

மும்பை கிர்காவ் பகுதியில், குறிப்பிட்ட பள்ளியின் அருகே விபசார விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இதனால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவதா கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு விபசார விடுதிகளை உடனடியாக மூட வேண்டும் என போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் வந்துள்ளது. புகாரின் பேரில், போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கர் அந்த பள்ளி அமைந்துள்ள வி.பி ரோடு பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, பள்ளியில் இருந்து 200 மீ்ட்டர் தொலைவில் விபசார விடுதிகள் செயல்பட்டு வருவது உறுதியாகி உள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கமிஷனர், 2 மாதத்திற்குள் பள்ளியின் அருகே செயல்படும் விபசார விடுதிகளை மூடுமாறு உத்தரவிட்டார். கமிஷ்னரின் உத்தரவின் பேரில், பள்ளியின் அருகே செயல்பட்டு வந்த 7 விபசார விடுதிகள் மூடி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் ஆள்கடத்தல் பிரிவு போலீசார் இங்கு அதிரடி சோதனை நடத்தினர். சோதனை நடத்தியதில், விபசாரத்தில் தள்ளப்பட்ட 33 பெண்களை போலீசார் மீட்டனர். மேலும் அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 24 பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Maha

Next Post

’படிப்பு குறித்து நான் பேசியதை எடிட் பண்ணிட்டாங்க’..!! ’நான் சொன்னதே வேற’..!! பகீர் கிளப்பிய பவா செல்லதுரை..!!

Sat Oct 14 , 2023
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தாமாக முன்வந்து ஒரே வாரத்தில் வெளியேறிய பவா செல்லதுரை தனது கல்வி குறித்த பேச்சு சர்ச்சையான நிலையில், அது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களில் ஒருவரான எழுத்தாளர் பவா செல்லதுரை, தனது உடல்நிலை மற்றும் மனநிலை பாதிப்பின் காரணமாக தாமாகவே முன்வந்து வெளியேறினார். பிக்பாஸின் முதல் வார நிகழ்ச்சியில் விசித்திரா – ஜோவிகா இருவருக்கும் இடையே நடந்த சச்சரவில், கல்வி அவசியமில்லை […]

You May Like