85 பதக்கங்கள்… இந்தியாவின் பெருமை! ஆசிய சாம்பியன்களை நேரில் கௌரவித்தார் பிரதமர் மோடி!

PM Modi asian game winners 30kb

ஜப்பானின் ஐச்சி-நாகோயாவில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தாயகம் திரும்பிய இந்திய விளையாட்டு வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துப் பாராட்டினார்.


இப்போட்டியில் இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. ஆசிய விளையாட்டு வரலாற்றுப் பாதையில் இந்தியா ஈட்டிய இரண்டாவது மிகச் சிறந்த பதக்கப் பட்டியல் இதுவாகும்.

இன்று (அக்டோபர் 15) நடைபெற்ற சந்திப்பில், வரலாற்றுச் சாதனை புரிந்த வீரர்களுக்குப் பொன்னாடை போர்த்தி பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு, இந்திய வீரர்கள் தங்கள் கையொப்பமிட்ட ஜெர்சிகளையும், ஹாக்கி மட்டையையும் பிரதமருக்குப் பரிசாக வழங்கினர்.

கிரிக்கெட்டில் ஆண், பெண் இரு அணிகளும் தங்கம் வென்று அசத்தின. கபாடியிலும் இரட்டைத் தங்கம் கிடைத்தது. ஆடவர் ஹாக்கி அணி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்து 2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றது. மகளிர் ஹாக்கி அணி இறுதிப்போட்டியில் சீனாவை 1-0 என வீழ்த்தி 44 ஆண்டுகளுக்குப் பிறகு (1982க்கு பின்) வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கத்தைக் கைப்பற்றியது. வில்வித்தை மற்றும் துப்பாக்கி சுடுதலிலும் பல தங்கப் பதக்கங்கள் வெல்லப்பட்டன.

தடகளப் பிரிவில் ஸ்ரீசங்கர் முரளி (நீளம் தாண்டுதல்), குல்வீர் சிங் ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்றினர். சாவன் பார்வால் 44 ஆண்டுகளுக்குப் பிறகு மாரத்தான் பிரிவில் வெள்ளி வென்று சாதனை படைத்தார். பளுதூக்குதலில் மீராபாய் சானு வெள்ளி வென்றார்.

தற்காப்புப் கலையான மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் (MMA) பிரிவில் சுசிகா தரியால் வெண்கலம் வென்று நாட்டின் முதல் பதக்கத்தைப் பதிவுசெய்தார். வித்யா ராம்ராஜ் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் பி.டி.உஷாவின் 40 ஆண்டுக்கால தேசிய சாதனையை முறியடித்து வெண்கலம் வென்றார். துடுப்புப் படகோட்டலிலும் இந்தியா வரலாற்றுப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

பாரம்பரிய விளையாட்டுப் பிரிவுகள் மட்டுமன்றி, புதிதாகச் சேர்க்கப்பட்ட பல களங்களிலும் இந்திய வீரர்கள் பதக்கம் வென்று நாட்டின் விளையாட்டுத் தரத்தை உலகளவில் மீண்டும் உயர்த்தியுள்ளனர்.

1newsnationuser5

Next Post

கொஞ்சம்கூட காமன் சென்ஸ் இல்ல; அவரை நீக்கியது பெரிய தவறு!. கம்பீர், ஸ்ரேயாஸ் ஐயரை சாடிய அஸ்வின்!

Thu Oct 15 , 2026
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணியின் தோல்வி மற்றும் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் இருந்து நீக்கிய அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து மூத்த கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின் கடுமையாக விமர்சித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 4-வது டி20 போட்டியில் இந்தியா 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் […]
R Ashwin 30kb

You May Like