“பரிதாபமாக பலியான ‘9’ வயது சிறுவன்”… கொலையில் முடிந்த ஓரினச்சேர்க்கை தகராறு.! இளைஞர் போக்சோவில் கைது.!

காரைக்காலில் ஓரினச்சேர்க்கை உறவுக்கு மறுப்பு தெரிவித்த நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக அருள்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

காரைக்கால் அருகே உள்ள நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் குழந்தை இல்லாததால் தனது சகோதரியின் 9 வயது மகனை தத்தெடுத்து உணர்த்து வந்துள்ளார். அந்த சிறுவன் அங்குள்ள பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தான் . இந்நிலையில் திடீரென காணாமல் போன சிறுவன் அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் நிர்வாண நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டான். இதனைத் தொடர்ந்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவரின் மீது காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை விசாரிக்க முயன்ற போது அருண் ராஜ் தலைமறைவானார். இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் இது தொடர்பாக நடத்திய விசாரணையில் சிறுவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். வாய்க்கால் அருகே அமர்ந்து தனது செல்போனில் ஆபாச படம் பார்த்திருக்கிறார் அருள்ராஜ்.

அங்கே குளித்துக் கொண்டிருந்த சிறுவனிடம் ஆபாச படத்தை காட்டி அவனை ஓரினச்சேர்க்கைக்கு இணங்குமாறு வற்புறுத்தி இருக்கிறார். இதற்கு மதிப்பு தெரிவித்த சிறுவன் அருள் ராஜை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றிருக்கிறான். இதனால் ஆத்திரம் அடைந்த அருள்ராஜ் சிறுவனை ஓங்கி உதைத்ததில் அருகில் இருந்த கம்பியில் சிறுவனின் கழுத்து குத்தியிருக்கிறது. இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை கொலை செய்து வாய்க்காலில் வீசி விட்டு சென்றதை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

Next Post

திமுக வேட்பாளர்கள்..!! விண்ணப்ப தேதியை அறிவித்தது தலைமை கழகம்..!!

Thu Feb 15 , 2024
திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதிக்குள் அளிக்க கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் விண்ணப்பம் பெறுவதற்கான தேதியை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்ப படிவங்களை பிப்ரவரி 19ஆம் தேதி முதல், சென்னையில் தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. […]

You May Like