900 ஆண்டு பழமை.. சிவபெருமானுக்கு துளசி இலையால் பூஜை நடக்கும் ஒரே கோயில்..! சென்னையில் எங்கே தெரியுமா..?

shivan temple 2

சிவபெருமானுக்கு பொதுவாக வில்வ இலைகள் மட்டுமே அர்ப்பணிக்கப்படுவது மரபாக அறியப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் துளசி இலைகளால் சிவபெருமானுக்கு பூஜை செய்யப்படும் தனித்துவமான கோயில் ஒன்று இருப்பது பலருக்கும் தெரியாத தகவலாகும்.


சென்னை – வல்லக்கோட்டை பாதையில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள வில்வவன நாயகி சமேத துளசீஸ்வரர் கோயில் இந்த அரிய மரபை தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. இங்கு சிவபெருமான் “துளசீஸ்வரர்” என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் துளசி மற்றும் கொன்றை மலர்களால் மட்டுமே பூஜை செய்யப்படுவது சிறப்பம்சமாகும்.

புராணக் கதைகளின்படி, இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தை மஹாரிஷி அகத்தியர் பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது. கைலாயத்தில் சிவ – பார்வதி திருமணம் நடைபெற்றபோது தேவர்கள் வடக்கு திசையில் திரண்டதால் பூமியின் சமநிலை பாதிக்கப்பட்டதாகவும், அதனை சமநிலைப்படுத்த சிவபெருமான் அகத்தியரை தெற்கே அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அப்போது அகத்தியர் 108 சிவலிங்கங்களை நிறுவியதாகவும் அவற்றில் ஒன்றாக இந்த தலம் கருதப்படுகிறது.

இந்த தலத்தில் அகத்தியர் துளசி இலைகளால் சிவபெருமானை பூஜை செய்ததாகவும், அதனால் மகிழ்ந்த சிவபெருமான் அர்த்தநாரீஸ்வர வடிவில் காட்சி அளித்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. அந்த வழிபாட்டு மரபே இன்றும் தொடர்ந்து வருகிறது என பக்தர்கள் நம்புகின்றனர்.

வரலாற்று ஆய்வுகளின்படி, சுமார் 900 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் விக்ரம சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு அமைந்துள்ள சிவலிங்கம் சுமார் 5 அடி உயரம் கொண்டதாகவும், சதுர வடிவ ஆவுடையாருடன் காணப்படுவது சிறப்பாகும். மேலும், லிங்கம் கிழக்கு நோக்கி இருந்தாலும் சற்று ஈசானியம் திசை நோக்கி அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்று கொளத்தூர் என அழைக்கப்படும் இந்த பகுதி முன்பு “செம்பியன் கொளத்தூர்” என அழைக்கப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. சோழ மன்னர்களின் சிறப்பு பட்டமான “செம்பியன்” என்ற பெயர் இதன் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. இத்தலத்தில் சிவபெருமானுடன் அமுதவல்லி தாயார் சமேத திருநாராயண பெருமாள் கோயிலும் அமைந்துள்ளதால், இது பக்தர்களால் அதிகம் வருகை தரப்படும் ஆன்மிக தலமாகவும் விளங்குகிறது.

Read more: முதற்கட்ட அமைச்சரவை பட்டியலில் இடம் பெறாத காங்கிரஸ்.. என்ன காரணம்? – செல்வப்பெருந்தகை விளக்கம்..!

Next Post

WFH அவசியம்.. பெட்ரோலை மிச்சப்படுத்துங்க.. நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்..!

Mon May 11 , 2026
WFH is necessary.. Save petrol.. Prime Minister Modi's sudden advice to the people of the country..!
pm modi in coimbatore felt bihars breeze when farmers waved their gamcha 192304420 16x9 0 1 1

You May Like