வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பேர் பெயர்கள் நீக்கம்…! முதல்வர் தலைமையில் இன்று அவசர கூட்டம்…!

tamilnadu cm mk stalin

காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டம் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் குறித்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட அந்த வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது. இதனால், கடந்த அக்.27-ம் தேதி நிலவரப்படி, 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 5.44 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை 6 மணியளவில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும். அதுபோது, மாவட்டக் கழக செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் கூட்டம் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் குறித்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

2026 சட்டமன்ற தேர்தலில் கரூரில் தான் போட்டி...! தொகுதியை அறிவித்த செந்தில் பாலாஜி...!

Sun Dec 21 , 2025
2026 சட்டமன்ற தேர்தலில் கரூரில் போட்டியிட உள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் நேற்று நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்பாலாஜி: கோவையில் நான் போட்டியிடப் போவதாக சமூகவலைதளங்களைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். கரூர் மக்கள் போட்டியிட்ட 5 தேர்தல்களிலும் என்னை வெற்றி பெற வைத்துள்ளனர். கரூர் மக்கள் என்னை அன்பாக, பாசமாக வைத்துள்ளனர். இன்னும் என் மேல் நம்பிக்கை வைத்து […]
Senthil Balaji 2025

You May Like