fbpx

மாடிப்படியில் இருந்த தவறி விழுந்ததால் எலும்புமுறிவு.. முன்னாள் முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதி..

ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..

பீகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் எலும்புமுறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அவர் தனது வீட்டு மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதையடுத்து பாட்னாவில் உள்ள பராஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 74 வயதான லாலு பிரசாத் யாதவ் பல உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருகிறார், அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.

லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று டிசம்பர் 2017 இல் சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட 3.5 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லியில் இருந்து பாட்னா திரும்பினார். கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி, கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான ரூ.139.35 கோடி டொராண்டா கருவூல வழக்கில் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்துக்கு ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

பகுதிநேர பொறியியல் படிப்பு..! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

Mon Jul 4 , 2022
பகுதிநேர பொறியியல் பட்டப்படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2022-23ஆம் கல்வியாண்டிற்கு தகுதி வாய்ந்த பட்டயப்படிப்பு முடித்து, பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு பகுதி நேர பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கோவை, நெல்லை, சேலம், பர்கூர் அரசு […]

You May Like