மதுராந்தகம் பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே தொழுப்பேடு என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மோதியது.. இந்த கொடூர விபத்தில், 2 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.. 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
இந்நிலையில் மதுராந்தகம் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. மேலும் விபத்தில் இறந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. மேலும் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்..