fbpx

இந்த டீலிங் நல்லா இருக்கே, ரூ 200 க்கு வாங்கிய செருப்புக்கு, 25,000 நஷ்ட ஈடு…!

திருப்பூர் மண்ணரை கருமாரம்பாளையத்தில் வசித்து வருபவர் சுபா(23). இவர் கடந்த 30-12-2021 அன்று திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள சிங்கப்பூர் ஷாப்பிங் கடையில் 200 ரூபாய்க்கு, இரண்டு ஜோடி காலணி வாங்கினார். இதற்கு கடையில் ரசீது கேட்டும் அவர்கள் கொடுக்கவில்லை. இந்தநிலையில் சுபா 200 ரூபாய் கொடுத்து வாங்கிய காலணி, கடந்த 7-1-2022 அன்று அறுந்து விட்டது.

உடனே சுபா அந்த அருந்த காலணியை எடுத்து சென்று கடையில் கேட்டுள்ளார். அவர்கள் காலணியை சரி செய்து கொடுப்பதாக கூறி, சரி செய்து கொடுத்துள்ளனர், ஆனால் சரி செய்த பிறகு அந்த காலணியை சுபாவால் அணியமுடியாத அளவுக்கு சிறியதாகி விட்டது. இதன் பிறகு கடந்த மார்ச் மாதம் திருப்பூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் சுபா வழக்கு தொடுத்தார். எதிர்தரப்பு ஆஜராகவில்லை.

இதனால் காலணிக்கான தொகை 200 ரூபாயும், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு 20 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவுத்தொகை 5 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை சுபாவுக்கு, சிங்கப்பூர் ஷாப்பிங் கடையின் உரிமையாளர் சாதிக் வழங்க வேண்டும் என, நுகர்வோர் கோர்ட்டு தலைவர் தீபா, உறுப்பினர்கள் பாஸ்கர், ராஜேந்திரன் ஆகியோர் உத்தரவிட்டனர்.

Rupa

Next Post

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையா? இல்லையா? பொதுக்குழு அன்றே தீர்ப்பு வழங்கும் ஐகோர்ட்..!

Fri Jul 8 , 2022
ஜூலை 11ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை வரும் திங்கட்கிழமை (ஜூலை 11) காலை 9 மணிக்கு ஒத்திவைத்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மனுவில், “பொதுக்குழு கூட்டத்திற்கு 15 நாட்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு […]
’யாரை கேட்டு இப்படி பண்ணீங்க’..!! ஓபிஎஸ்-க்கு நோட்டீஸ் அனுப்பிய எடப்பாடி..!! பரபரக்கும் அதிமுக..!!

You May Like