fbpx

ரேஷன் அட்டையில் திருத்தம்…! இன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை மட்டுமே…! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!

பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் இன்று நடைபெரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பொது விநியோகத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி, ஜூலை-2022 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு அல்லது மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை அல்லது நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்தகுடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றைப் பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

Also Read: பெண்களுக்கான மிஷன் வாத்சல்யா திட்டத்திற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…! மத்திய அரசு தகவல்…

Vignesh

Next Post

அப்படி போடு... பொதுமக்கள் இனி வண்டல்‌ மண்ணை இலவசமாக எடுத்து பயன்படுத்தலாம்...! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு...!

Sat Jul 9 , 2022
ஏரிகள்‌ மற்றும்‌ குளங்களில்‌ படிந்திருக்கும்‌ வண்டல்‌ மண்ணை இலவசமாக விவசாயிகள்‌ எடுத்துப்‌ பயன்படுத்துவதற்கு வழிகாட்டி நெறிமுறைகள்‌ வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்‌, ஏரிகளிலும்‌ குளங்களிலும்‌ படிந்திருக்கும்‌ வண்டல்‌ மண்ணை விவசாயிகள்‌ பயன்படுத்தி மண்வளத்தை உயர்த்துவதற்கான விழிப்புணர்வு தொடர்பாக முதலமைச்சர்‌ அவர்களின்‌ ஆணைக்கிணங்க, தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையில்‌, 14-8-2021 அன்று “ஏரிகள்‌, குளங்களில்‌ படிந்திருக்கும்‌ வண்டல்‌ மண்ணை விவசாயிகள்‌ பயன்படுத்தும்‌ வகையில்‌, மாவட்ட ஆட்சியரின்‌ அனுமதியைப்‌ பெற்று எடுத்துக்‌ கொள்ள தொழில்‌ துறை, நீர்வள […]

You May Like