திருச்சி மற்றும் காரைக்குடி முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் அனைத்தும் தற்போது மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திருச்சி – காரைக்குடி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது. திருச்சி – காரைக்குடி சிறப்பு ரயில் (06887) மற்றும் காரைக்குடி – திருச்சி சிறப்பு ரயில் (06888) ஜூலை 18 மற்றும் 19ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது பயணிகளின் வசதிக்காக இந்த ரயில்களை முன்கூட்டியே இயக்குவதற்கு தெற்கு ரயில்வே முடிவு செய்தது. அதன்படி, திருச்சி – காரைக்குடி முன்பதிவில்லா சிறப்பு ரயில் மற்றும் காரைக்குடி – திருச்சி முன்பதிவில்லா சிறப்பு ரயில் ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகள் முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சி -காரைக்குடி ரயில் சனிக்கிழமைகளிலும், காரைக்குடி-திருச்சியில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்பட மாட்டாது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.