fbpx

முதலையின் வயிற்றில் சிறுவன் உயிருடன் இருப்பதாக நம்பிய கிராமத்தினர்…!

மத்தியப் பிரதேசம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் கிராமத்தில் உள்ள அந்தர் சிங் என்ற ஏழு வயது சிறுவன் சம்பல் ஆற்றில் குளிக்க சென்றுள்ளான். நீண்ட நேரமாகியும் அந்த சிறுவன் கரைக்கு திரும்பவில்லை. இதனால் சிறுவன் அந்தர் சிங்கை ராட்சத முதலை விழுங்கியதாக கூறி கிராமத்தினர் முதலை ஒன்றை ஆற்றிலிருந்து பிடித்து கரையில் கொண்டு வந்து போட்டனர்.

பின்னர் முதலையின் வயிற்றைக் கிழித்து சிறுவனை உயிருடன் மீட்க வேண்டும் என்று முயற்சி செய்தனர். இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், முதலை சிறுவனை விழுங்கி இருக்காது என கூறினர். இதை கேட்டு கோபமடைந்த நூற்றுக்கணக்கான கிராமத்தினர் மற்றும் முதலை விழுங்கியதாகக் கருதப்படும் சிறுவன் அந்தர் சிங்கின் பெற்றோரும், முதலையை கிழித்து பையனை மீட்க வேண்டும் என்றும் பையன் உயிருடன் இருப்பான் என்றும் அவர்கள் நம்பினர். முதலைவாயில் பெரிய பிரம்பு கம்பு ஒன்றை குறுக்காக சொருகியுள்ளனர். இதனால் பையனை முதலை கடித்துத் தின்னாமல் இருக்கும் என்று கிராமத்தினர் எண்ணினர். மேலும் அவர்கள் முதலையின் வாய் வழியாக அந்தர் சிங்க் வந்து விடுவான் என்று எண்ணி அவனை பெயர் சொல்லி அழைத்தனர்.

இதற்கிடையில் சம்பல் நதியின் ஆழமான பகுதிக்கு ஏழு வயது சிறுவன் நீந்தச் சென்றதால் நீரில் மூழ்கியிருக்கலாம் என்று காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். ஆனால் கிராமத்தினர் முதலையை கிழித்து பார்க்கும் வரை அதை விட மாட்டோம் என்று முதலையை‌ சிறைப்பிடித்து வைத்தனர். நதியில் தேடச்சென்ற குழுவும் இன்று காலை வரை பையன் கிடைக்காததால் தேடுவதையும் நிறுத்தி கொண்டனர். மேலும் கிராமத்தினர் முதலைகள் மனிதனை உண்பதாகக் கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பல் ஆற்றில் நிறைய முதலைகள் இருப்பதாகவும் புகார் அளித்தனர். சில கிராமத்தினர் பையனை முதலை விழுங்கியதை நேரில் கண்டதாகவும் கூறினர்.

கடைசியில் ஒருவழியாக காவல்துறையினர் முதலையைக் கிழிக்காமல் கிராமத்தினரிடமிருந்து முதலையை மீட்டனர். ஆனால் சிறுவனின் கதி என்னவென்று தெரியவில்லை. பையன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்றும், மேலும் சிறுவனை முதலை விழுங்கி விட்டது என்றே கிராமத்தினர் நம்பியதால் அவர்கள் கடும் கோபத்தில் இருப்பதாக கூறுகின்றனர்.

Rupa

Next Post

ரோகித் ஷர்மா குறித்து மட்டும் ஏன் யாருமே பேசுவதில்லை? கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த கவாஸ்கர்..!

Tue Jul 12 , 2022
விராட் கோலி ஃபார்முக்கு திரும்ப ஒருநாள் தொடர் வாய்ப்பாக அமையும் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் அக்.16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, இந்திய அணி பல்வேறு வீரர்களை டி20 உலகக் கோப்பைக்காக தயார்படுத்தி வருகிறது. இந்நிலையில், அண்மை காலமாக மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக ரன் எடுக்க முடியாமல் தவித்து வரும் […]
ரோகித் ஷர்மா குறித்து மட்டும் ஏன் யாருமே பேசுவதில்லை? கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த கவாஸ்கர்..!

You May Like