fbpx

விசாரித்த போது தெரிந்து கொண்ட உண்மை… அதிர்ச்சியில் உறைந்த பெண் மருத்துவர்…!

சென்னை தியாகராய நகர் பகுதியை சேர்ந்த, இளம்பெண்(29) ஒருவர் அசோக் நகர் மாநகராட்சி சுகாதாரத்துறையில் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் வேளச்சேரியைச் சேர்ந்த பி. டெக் பட்டதாரியான பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 2020 ஆம் வருடம் திருமணம் நடந்தது.

அப்போது ஐ.ஐ.டியில் வேலை செய்வதாக கூறிய மணமகன் பிரபாகரனுக்கு பெண் வீட்டார் 111 பவுன் நகை மற்றும் பதினைந்து லட்சம் மதிப்புள்ள கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்தனர். இந்த நிலையில் கல்யாணம் ஆன சில மாதங்களிலேயே தனது கணவர் குடிப்பழக்கம் உள்ளவர் என்பது அந்த பெண்ணுக்கு தெரிந்தது. மேலும் அவர் தினசரி இரவு குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் அவர் மீது பெண் மருத்துவருக்கு சந்தேகம் வந்தது. இதைத் தொடர்ந்து தனது கணவரை பற்றி விசாரித்ததில், அவரது கணவர் பிரபாகரன் ஐ.ஐ.டியில் வேலை செய்வதாக கூறி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது தெரிந்தது. இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.

இதைத்தொடர்ந்து பிரபாகரன் ஏற்கனவே வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து குழந்தை இருப்பதும், அதை மறைத்து தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து ஏமாற்றியதும் தெரியவந்தது. இந்நிலையில் திருமணத்தின் போது அந்த பெண்ணுக்கு கொடுத்த வரதட்சணை நகைகளையும் பிரபாகரன் கொஞ்சம் கொஞ்சமாக விற்று செலவு செய்துள்ளார். இதுபற்றி பிரபாகரனிடம் கேட்டபோது அந்த பெண்ணை தினமும் அடித்து கொடுமைபடுத்தி வந்துள்ளார்.

மேலும் அவரது குடும்பத்திலுள்ளவர்களையும் பிரபாகரன் மிரட்டியுள்ளார். இதுகுறித்து பெண் மருத்துவர் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய மகளிர் காவல்துறையினர் வரதட்சனை கொடுமை, ஆபாசமாக பேசுதல், நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Rupa

Next Post

பஞ்சாப்-ன் முன்னாள் சபாநாயகர் உடல்நலக்குறைவால் மறைவு.. அரசியல் தலைவர்கள் இரங்கல்..

Sat Jul 16 , 2022
பஞ்சாப் சட்டசபையின் முன்னாள் சபாநாயகரும், சிரோமணி அகாலிதள தலைவருமான நிர்மல் சிங் காலோன் இன்று காலமானார். அவருக்கு வயது 79. 1997 முதல் 2002 வரை ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துகள் மாநில அமைச்சராகவும், 2007 முதல் 2012 வரை பஞ்சாப் சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் நிர்மல் சிங் பணியாற்றினார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக நீண்ட நாட்கள் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்தார்.. அவரின் மறைவுக்கு சிரோமணி அகாலி தள தலைவர் […]

You May Like