fbpx

இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோயாளி குணமடைந்தார்.. மேலும் 2 பேருக்கு பாதிப்பு..?

உலகளவில் குரங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. சுமார் 75 நாடுகளில் இருந்து 16,000 க்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்தியாவில் கேரளாவில் 3 பேர், டெல்லியில் ஒருவர் என 4 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளன.. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மாநிலத்திற்குள் நுழைவதைத் தடுக்க விமான நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது..

இதனிடையே ஆந்திர மாநிலம் குண்டூரில் 8 வயது சிறுவனுக்கு குரங்கு நோய் அறிகுறி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அச்சிறுவன் குண்டூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்… அவருக்கு குரங்கு அம்மை இருக்கிறதா என்பதை கண்டறிய, அவரின் மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் செகந்திராபாத் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.. சோதனையின் முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது சிறுவன் தனிமைப்படுத்தப்பட்டு சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதே போல் குரங்கு அம்மை அறிகுறிகளுடன் குரங்கு காய்ச்சலின் அறிகுறிகளுடன் எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஒருவர் தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அவரது மாதிரிகள் பெங்களூரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது..

இந்நிலையில் இந்தியாவின் முதல் குரங்கு அம்மை பாதிப்பு உறுதியான, கேரளாவின் கொல்லத்தைச் சேர்ந்த 35 வயது நபர் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய நாட்டிலேயே குரங்கு காய்ச்சலின் முதல் பாதிப்பு என்பதால், தேசிய வைராலஜி நிறுவனத்தின் (என்ஐவி) அறிவுறுத்தல்களின்படி 72 மணிநேர இடைவெளியில் இரண்டு முறை சோதனைகள் நடத்தப்பட்டன. “அனைத்து மாதிரிகளும் இரண்டு முறை எதிர்மறையாக இருந்தன. நோயாளி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்கிறார். தோல் புண்கள் முற்றிலும் குணமாகும்..” என்று தெரிவித்தார்..

முன்னதாக வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு திரும்பிய அந்த நபருக்கு,, குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் ஏற்பட்டதை அடுத்து அவரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஜூலை 14 அன்று அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.27,000 வரை சம்பளம் உயரப்போகிறது.. விரைவில் அறிவிப்பு...

Sun Jul 31 , 2022
மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ், அகவிலைப் படி, வீட்டு வாடகை கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17% இல் இருந்து 31% ஆக உயர்த்தப்பட்டது.. பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மேலும் 3% உயர்த்தப்பட்டது, 34% ஆக மாறியது.. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த முறை 4 சதவீத […]

You May Like