fbpx

தமிழகத்தில் அடுத்த பயங்கரம்… கத்தி முனையில் கடத்தப்பட்ட இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கற்பழிப்பு…!

தமிழகத்தில் ஏற்கனவே சட்ட ஒழுங்கு சீர்கேடு இருப்பதாக பாஜக உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே மகிழுந்தில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை கத்தி முனையில் கடத்திச் சென்ற 4 பேர் கும்பல், கொளுத்துவாஞ்சேரி என்ற இடத்தில் முள்புதருக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது கண்டன அறிக்கையில்; இளம் பெண்ணை கடத்தி சீரழித்த நால்வரும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட போது கூட அவர்களின் போதை தெளியவில்லை எனத் தெரிகிறது. போதை எத்தகைய சமூகக் குற்றங்களுக்கு வழி வகுக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம். போதைப்பொருட்களை ஒழிப்பது குறித்து ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், போதைப்பொருட்களால் இத்தகைய குற்றங்கள் நிகழ்வதையும் கருத்தில் கொண்டு போதை ஒழிப்பு உத்திகளை வகுக்க வேண்டும்.

பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடமாடுவதை உறுதி செய்வது தான் நல்லாட்சிக்கான இலக்கணம் ஆகும். அதற்கான நடவடிக்கைகளையும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை தண்டிப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Vignesh

Next Post

அதிரடி நடவடிக்கை..‌‌. அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நாளை முதல் 19-ம் தேதி வரை...! தமிழக அரசு போட்ட உத்தரவு...!

Thu Aug 11 , 2022
வரும் 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை போதை விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவு. தமிழகம் முழுவதும் போதைப்பொருள் பயன்பாட்டு என்பது சமீப காலமாகவே அதிகரித்து காணப்படுகின்றன. இதனை தடுக்க அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால் போதை பொருள் பயன்பாடு என்பது தொடர்ச்சியாக அதிகரித்து தான் வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் மத்தியில் இதன் பழக்கம் அதிகரித்து […]

You May Like