fbpx

பிரபல நகைச்சுவை நடிகர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.. உடல்நிலை கவலைக்கிடம்..

பிரபல நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..

பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஸ்ரீவஸ்தவா நேற்று ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. அவர் தற்போது ஆபத்தான நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்..

ராஜு ஸ்ரீவஸ்தவா டிசம்பர் 25, 1963 இல் ரமேஷ் சந்திர ஸ்ரீவஸ்தவ்வுக்கு மகனாக பிறந்தார். ராஜு ஸ்ரீவஸ்தாவாவுக்கு சிறு வயதில் இருந்தே நகைச்சுவை நடிகராக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இதையடுத்து மைனே பியார் கியா, மே பிரேம் கி தீவானி ஹூன், பாசிகர், பாம்பே டூ கோவா மற்றும் பல பாலிவுட் படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். பின்னர் நகைச்சுவை நடிகராகவும், மிமிக்ரி கலைஞராகவும் பிரபலமானார்.. அவர் ஹிந்தி மட்டுமின்றி, பல மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார். தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்ச் என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் தி கிங் ஆஃப் காமெடி என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

கண்ணாடிக்கு பதில் நெகிழி பாட்டிலில் மது விற்பனை..? சென்னை ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் சொன்னது என்ன..?

Thu Aug 11 , 2022
மதுவை நெகிழி பாட்டிலில் விற்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரதாப் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், மதுபானங்களை கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக நெகிழி பாட்டில்களில் விற்க 1996ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்படி, பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து மது விற்பனை செய்யப்பட்டால் தீங்கு ஏற்படும் என்பதால் அந்த உத்தரவை ரத்து செய்யுமாறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு […]

You May Like