fbpx

அலர்ட்… வரும் 13-ம் தேதி வரை… தென் தமிழகத்தில் பிச்சி ஒதர போகும் கனமழை…! வானிலை மையம் அப்டேட்…

தமிழகத்தில் வரும் 13-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திர கடலோரப்பகுதிகளில்‌ நிலவும்‌ காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று வட தமிழக மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களிலும்‌, தென்‌ தமிழக மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களிலும்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நாளை முதல் வரும் 13-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ தமிழக கடலோரப் பகுதிகளில்‌ பலத்தகாற்று மணிக்கு 30 முதல்‌ 40 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. தென்மேற்கு மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. கர்நாடக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌ என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

செம வாய்ப்பு... மீன்‌ வளர்ப்பினை தமிழக அரசு சார்பில் ரூ.36,000 மானியம் வழங்கப்படும்...! உடனே விண்ணப்பிக்கவும்...!

Sat Sep 10 , 2022
சேலம்‌ மாவட்டத்தில்‌ பல்நோக்குப்‌ பண்ணைக்‌ குட்டைகளில்‌ மீன்‌ வளர்ப்பினை ஊக்குவிக்க ஏதுவாக உள்ளீட்டு மானியம்‌ வழங்கப்படுகிறது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ தனது செய்தி குறிப்பில்; மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறை அமைச்சர்‌ அவர்களால்‌ 2022-2023 ஆண்டு சட்டமன்றக்‌ கூட்டத்‌ தொடரில்‌ மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறையின்‌ மானிய கோரிக்கையில்‌ 13.04.2022 அன்று பல்நோக்குப்‌ பண்ணைக்‌ குட்டைகளில்‌ மீன்‌ வளர்ப்பினை ஊக்குவிக்க உள்ளீட்டு மானியம்‌ வழங்கப்படும்‌ என்ற அறிவிப்பின்படி, […]

You May Like