fbpx

மக்களே பத்திர பதிவு துறையில் புதிய கட்டுப்பாடு‌…! இனி இதை எளிதில் பார்வையிடலாம்..! தமிழக அரசு அதிரடி…

வணிக நோக்கத்திற்காக ஒரே நேரத்தில் வில்லங்க விவரங்களை பார்க்க பதிவு துறையில் கட்டுப்பாடு‌. பொதுமக்கள் எளிதாக பார்க்க வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர்‌ மற்றும்‌ வணிகவரிமற்றும்‌ பதிவுத்துறை அமைச்சர்‌ அவர்களின்‌ வழிகாட்டுதலின்படி பதிவுத்துறையின்‌ செயல்பாடுகளைமேம்படுத்துவதற்காக துறையில்‌ பல சீர்திருத்த நடவடிக்கைகள்‌ தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பதிவுத்துறையால்‌ பயன்படுத்தப்பட்டு வரும்‌ ஸ்டார்‌ மென்பொருள்‌ மெதுவாக இயங்குவதாகவும்‌ சொத்துகுறித்த வில்லங்க விபரங்களை பதிவுத்துறையின்‌ இணையதளத்திலிருந்து இலவசமாகப்‌ பார்வையிடுவதில்‌ சிரமம்‌ இருப்பதாகவும்‌ பொதுமக்களிடமிருந்து புகார்‌ பெறப்பட்டு வந்தது. எனவே மென்பொருள்‌ இயங்குவதில்‌ உள்ள இடர்பாடுகளைக்‌ களையும்‌ நோக்கில்‌ வணிகவரி மற்றும்‌பதிவுத்துறை செயலாளர்‌ தலைமைசெயலகத்தில்‌ பதிவுத்துறைத்‌ தலைவர்‌ மற்றும்‌ டாட்டா கன்சல்டன்சி நிறுவனத்தின்‌ உயர்‌ மட்ட அதிகாரிகளுடன்‌ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடத்தினார்‌.

அக்கூட்டத்தில்‌ ஸ்டார்‌ மென்பொருள்‌ மெதுவாக இயங்குவதாக பெறப்பட்டூள்ளபுகார்கள்‌ குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது, மேலும்‌, சொத்து குறித்த வில்லங்க விவரங்கள்‌ பதிவுத்துறையின்‌இணையத்தளத்தில்‌ இலவசமாகப்‌ பார்வையிடுவதில்‌ சிரமங்கள்‌ ஏற்படுவதாக சொல்லப்படூம்‌ புகார்கள்‌ குறித்தும்‌ விரிவாக விவாதிக்கப்பட்டது. தன்னிச்சையாக ஒரு சில தனியார்‌ செயலிகள்‌ இணைய தளத்தோடுஇணைக்கப்பட்டிருந்ததாகவும்‌ தற்போது அத்தனியார்‌ செயலிகளின்‌ இணைப்பு துண்டிக்கப்பட்டு சேவை மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும்‌ டிசிஎஸ்‌ அதிகாரிகள்‌ தெரிவித்தனர்‌.

சொத்து குறித்த வில்லங்க விவரங்களை பொது மக்கள்‌ இலவசமாகப்‌ பார்வையிடும்‌ வசதியை சில தனியார்‌ செயலிகள்‌முறையின்றி பயன்படுத்தி வில்லங்க விவரங்களை அதிக எண்ணிக்கையில்‌ பதிவிறக்கம்‌ செய்வதைத்‌ தவிர்க்கும்‌நோக்கில்‌ இனிவரும்‌ காலங்களில்‌ ஒரு புதிய செயல்முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சொத்து குறித்த வில்லங்க விவரங்களைப்‌ பார்வையிட விரும்புவோர்‌ ஒருமுறைஉள்‌ நுழையும்‌ குறியீட்டைப்‌ பயன்படுத்தியே இனி பார்வையிடமுடியும்‌.

Vignesh

Next Post

பயங்கர அலர்ட்... இந்த மாவட்டத்தில் எல்லாம் கனமழை பெய்யும்...! வானிலை மையம் கணிப்பு

Tue Sep 13 , 2022
தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் […]

You May Like