fbpx

அசத்தல்… தமிழகம் முழுவதும் மொத்தம் 10 முக்கிய மாற்றங்கள்…! தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு…!

தமிழகத்தில் பத்து முதன்மை கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில்; முதன்மை கல்வி அலுவலர்களின் பணிபுரியும் அலுவலர்களுக்கு நிர்வாகம் மாறுதல் வழங்கப்படுகிறது. மேலும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வும் வழங்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த விஜயலட்சுமி அரியலூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலராகவும், திருநெல்வேலி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி நாகப்பட்டினம் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வந்தவர்கள் முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். சென்னை கிழக்கு மாவட்ட கல்வி அலுவலர் சரஸ்வதி கள்ளக்குறிச்சி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலராக நியமனம் செய்யப்படுகிறார். விருதுநகர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி, திருநெல்வேலி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலராக பணியிடம் மாற்றம் செய்யப்படுகிறார். புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் முத்தையா தஞ்சாவூர் மகாராஜா சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகத்தின் நிர்வாக அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன் தொடக்கக் கல்வித் துணை இயக்குனராக நியமனம் செய்யப்படுகிறார். வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் தனியார் பள்ளிகள் துணை இயக்குனராக நியமிக்கப்படுகிறார். திருத்தணி மாவட்ட கல்வி அலுவலர் அருளரசு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் துணை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்...! தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம்...!

Wed Sep 21 , 2022
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில்; இலங்கை கடற்படையினரால் 20.09.2022 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதையும், அவர்களின் விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டதையும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு […]

You May Like