தமிழகத்தில் வழக்கமாக அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் உள்ளிட்ட மூன்று மாதங்களும் வடகிழக்கு பருவமழையானது பெய்யும். இருப்பினும், சமீபத்தில் வங்க கடலில் உருவாகிய இருக்கும் சித்ரங் புயல் காரணமாக வடகிழக்கு பருவமழையானது தமிழகத்தில் துவங்குவதற்கான நேரத்தில் துவங்கவில்லை.
தாமதமாக தான் வடகிழக்கு பருவமழை துவங்குகிறது. இது குறித்து சமீபத்தில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டது. அக்டோபர் 29 ஆன இன்று துவங்கும் இந்த பருவ மழை அடுத்த மாதம் நான்காம் தேதி வரை முதல் மழைப்பொழிவு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், புதுச்சேரி, ஆந்திரா, தமிழகம் மற்றும் ஒடிசாவில் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக, நவம்பர் 1 மற்றும் 3 உள்ளிட்ட தேதிகளில் தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் கனமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் தமிழ்நாட்டுக்கு ஆரஞ்சு அலட் விடுக்கப்பட்டு இருக்கிறது.