fbpx

ஒரு வயது குழந்தைக்கு ஏற்ற சத்தான உணவு..! 

குழந்தைகளுக்கு என்ன என்ன உணவுகளை அளிக்கலாம் என்பதில் பலருக்கும் ஐயம் இருந்து வருகின்ற நிலையில் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

குழந்தைக்கு தினமும் சத்துள்ள உணவினை அளிப்பது முக்கியமான ஒன்று. இந்த நிலையில் காலை மற்றும் மாலை நேரத்தில் கஞ்சி செய்து கொடுப்பது பலன் தரும். அவ்வாறு குடுக்கும் கஞ்சில் சத்து இருக்கும்படி பார்த்துக்கொண்டாலே போதும். வீட்டிலேயே செய்யப்படும் கஞ்சி மாவானால் சிறப்பான ஒன்றாகும்.

இதனை தொடர்ந்து சத்து மாவுடன்,சில நட்ஸ் வகைகளின் கலவையும் இருக்க வேண்டும். அத்துடன் சத்துமாவில் பாலினை சேர்த்து கொடுத்து வருவதால் புரதச்சத்தும் அதிகரிக்கிறது. கஞ்சியை பிரதான வேளை உணவாகக் கொடுக்க வேண்டாம் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளின் ஒரு வயதில் உணவினை அளிக்க தொடங்கலாம். இந்த நிலையில் வழக்கமாக சமைக்கும் உணவு பொருட்களில் காரம், உப்பு மற்றும் மசாலா அளவினை குறைத்து, அதன் பின்னர் குழந்தைகளுக்கு உணவளிக்க தொடங்கலாம்.

சில பொருட்கள் சத்து மாவு கஞ்சி தயாரிக்க முக்கிய பொருள்களாகும். அவைகளாவன சோளம், சிவப்பரிசி, கோதுமை, முளைகட்டிய கேழ்வரகு, ஜவ்வரிசி, பொட்டுக்கடலை, பச்சைப் பயறு, கறுப்பு உளுந்து,பிஸ்தா, வேர்க்கடலை, கொண்டைக்கடலை, கொள்ளு, முந்திரிப்பருப்பு மற்றும் பாதாம் போன்றவை இதில் அடங்கும். 

Rupa

Next Post

அதிர்ச்சி..!! உலகநாயகன் மருத்துவமனையில் அனுமதி..!! ரசிகர்கள், தொண்டர்கள் கலக்கம்..!!

Thu Nov 24 , 2022
திரைப்பட நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் சோர்வு மற்றும் லேசான காய்ச்சல் காரணமாக சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு நடிகர் கமல்ஹாசன் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்தியன் 2 திரைப்படம் மற்றும் பிக்பாஸ் படப்பிடிப்பு, இன்னொரு பக்கம் அரசியல் செயல்பாடுகள் என பிஸியாக இருந்து வந்த கமல், […]

You May Like