தேனி மாவட்ட பகுதியில் உள்ள பண்ணைப்புரத்தில் பாண்டி என்பவர் தனது மகள் லட்சிதா வுடன் வசித்து வருகிறார். மகள் பெரியகுளம் பகுதியில் இருக்கும் கைலாசபட்டியில் உள்ள தனியார் மகளிர் நர்சிங் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.
கல்லூரி வளாகத்திலேயே செயல்பட்டு வருகின்ற மாணவிகளுக்கான விடுதியில் தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இதனிடையே நேற்று முன்தைய தினத்தில் காலை நேரத்தில் விடுதியில் மூன்றாவது மாடிக்கு சென்றுள்ள இவர் திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் அங்கிருந்து கிழே குதித்துள்ளார்.
அலரல் சத்தம் கேட்டு மற்ற மாணவிகள் பதறி அடித்துக்கொண்டு சென்று பார்த்தார்கள். கீழே விழுந்ததில் அந்த பெண்ணுக்கு காலில் இருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டு வலியால் கதறியுள்ளார். அவரை மீட்டு கல்லூரி நிர்வாகம் மருத்துவமனையில் சேர்த்தனர்.இது பற்றி தகவல் அறிந்த நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் மாணவி லட்சிதாவுக்கு சென்ற இரண்டு நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கல்லூரி நிர்வாகம் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். பெற்றோர்கள் வருவதாக கூறிய நிலையில் மாணவி இவ்வாறு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.