மலேசியா பகுதியில் உள்ள சபாவில் லாஹாட்டத்து என்ற கடற்கரையில் தந்தையும் மகனும் மீன் பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது 11 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று அந்த சிறுவனை இழுத்து கொண்டு சென்று உயிருடன் தின்றது.
இதனை பார்த்த தந்தை பதறிப்போயி தன் மகனை முதலையிடம் இருந்து மகனை காப்பாற்ற பெரிதும் முயன்றார். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததோடு மகனை காப்பாற்றும் முயற்சியில் அவருக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டன.
இந்த நிலையில் கடினமாக போராடிய பிறகும் அவரால் தன் மகனை காப்பாற்றவே முடியவில்லை. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுத்தலைவர் சும்சோவாரஷித், காயமடைந்த தந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதனையடுத்து பரிதாபமாக இறந்த சிறுவனின் உடலை ராயல் மலேசியன் காவல்துறை மற்றும் கடல்காவல்துறையினர், உள்ளூர் தீயணைப்புத்துறையுடன் இணைந்து தேடி வருகின்றனர். ஆனால் இன்னும் உடல் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.