fbpx

பெற்றோருடன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றிய சிறுமிக்கு ஏற்பட்ட கொடூரம்! தீயில் கருகி பலியான பரிதாபம்!

திருவிழா உள்ளிட்ட மக்கள் நெருக்கடி உள்ள பகுதிகளுக்கு தங்களுடைய குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது பெற்றோர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் என்று பல சமயங்களில் காவல்துறையினர் எச்சரிக்கை செய்வதுண்டு.
பல கோவில் திருவிழாக்களில் காவல்துறையினர் இது போன்ற எச்சரிக்கைகளை ஒலிபெருக்கியின் மூலமாக செய்து கொண்டே தான் இருப்பார்கள்.

ஆனால் அதையும் மீறி ஒரு சில அசம்பாவிதங்கள் நடப்பதுண்டு, அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள மாளிகை பட்டை பகுதியில் காசிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்ய பிரியா என்ற மகள் இருந்திருக்கிறார். இந்த சிறுமி அரசினர் நடுநிலை பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில், அந்த பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் தான் திவ்யபிரியா தன்னுடைய பெற்றோருடன் அந்த கோவிலில் அகல் விளக்கு ஏற்றியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அகல் விளக்கில் எரிந்து கொண்டிருந்த நெருப்பு சிறுமியின் ஆடையில் பற்றி உடல் முழுவதும் பரவி எரிந்தது.

ஆகவே தீயின் சூட்டினால் சிறுமி திவ்யப்பிரியா அலறி துடித்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக தங்களுடைய மகளை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமி திவ்யப்பிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

ஓகோ..!! 'என் மேலயே மோத வரியா'..!! பேருந்து ஓட்டுநரை ஒருவழியாக்கிய பெண்..!! சேலத்தில் பரபரப்பு

Wed Dec 21 , 2022
தனியார் பேருந்து ஓட்டுநரிடம் பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பேருந்தை எட்டி உதைத்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் செம்மாண்டப்பட்டி பகுதியில் வசித்து வருபவர்கள் கோவிந்தராஜ்-ஜமுனா தம்பதியினர். கோவிந்தராஜ் பக்கவாதம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று மனைவி ஜமுனா கோவிந்தராஜின் உதவித்தொகைக்காக விண்ணப்பித்து விட்டு சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து சாலையை கடக்க முயற்சித்துள்ளார். அப்போது அவ்வழியாக […]
ஓகோ..!! என் மேலயே மோத வரியா..!! பேருந்து ஓட்டுநரை ஒருவழியாக்கிய பெண்..!! சேலத்தில் பரபரப்பு

You May Like