பிரதமர் நரேந்திர மோடியின் தம்பி பிரகலாத் மோடி செவ்வாய்க்கிழமை கார் விபத்தில் காயமடைந்தார். அறிக்கைகளின்படி, அவர் தனது மகன், மருமகள் மற்றும் பேரனுடன் பந்திப்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது, கர்நாடகாவின் மைசூரு அருகே அவரது மெர்சிடிஸ் பென்ஸ் கார் சாலையில் இருந்து டிவைடரில் மோதியது.
பிரஹலாத் மோடி தனது குடும்பத்தினருடன் ஜேஎஸ்எஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், இருப்பினும் அவர்களுக்கு லேசான காயம் அடைந்து தற்போது பாதுகாப்பாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கின்றன.

பிரஹலாத் மோடி யார்…?
நரேந்திர மோடியின் பெற்றோர் தாமோதர்தாஸ் மோடி மற்றும் ஹீரா பென் மோடி ஆகியோருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளில் நான்காவது குழந்தை பிரஹலாத் மோடி. 2001ல் நிறுவப்பட்ட அகில இந்திய நியாய விலைக்கடை வியாபாரிகள் கூட்டமைப்பின் துணைத் தலைவராக உள்ளார்.
பிரகலாத் மோடி, தனது சகோதரர் நரேந்திர மோடியால் நிறுவப்பட்ட அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிராக பல முறை எதிர்ப்புத் தெரிவித்தார். முதுமை காரணமாக ஓய்வு பெறுவதற்கு முன்பு அகமதாபாத்தில் ரேஷன் கடை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.