தமிழக அரசின் சார்பாக நெடுஞ்சாலை போடுவது முதல், கால்வாய்கள் அமைப்பது வரையில் பல்வேறு டெண்டர்கள் விடப்படுகின்றனர்.
அரசு சார்பாக விடப்படும் டெண்டர்களை கைப்பற்றினால் அதில் நல்ல லாபம் பார்க்கலாம் என்று அந்த டெண்டர்களை எடுப்பதற்கு பல்வேறு நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றனர்.
அப்படி அரசு விடும் டெண்டர்களை எடுப்பதில் பல நிறுவனங்கள் போட்டியிடும். தங்களுக்கு போட்டியாக ஏதாவது ஒரு நிறுவனம் வந்து அரசு டென்டரை எடுத்து விட்டால் அந்த நிறுவனத்தின் மீது எதிர்தரப்பினர் கடும் கோபத்தில் இருப்பார்கள்.
இந்த கோபத்தின் நீழ்ச்சியாக அந்த டெண்டர் எடுத்த நிறுவனத்தை சார்ந்தவர்கள் தங்களுடைய உயிரையும் கூட இழக்கும் சூழ்நிலை ஏற்படலாம் அப்படியான சம்பவங்கள் பலமுறை தமிழகத்தில் நடந்துள்ளது.
அந்த வகையில், மீஞ்சூர் அருகே இருக்கின்ற கொண்டக்கரை ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பணியாற்றி வருபவர் ஹரி கிருஷ்ணன். இவர் தற்சமயம் ஊராட்சி மன்ற தலைவர் பதவியையும் கூடுதலாக கவனித்து வருகின்றார் என்று சொல்லப்படுகிறது.
ஹரி கிருஷ்ணன் கொண்டகரை அருகே இருக்கின்ற கவுண்டர்பாளையம் பகுதியில் அனல் மின் நிலையம் ஒன்றில் நிலக்கரி சாம்பல் கழிவை அகற்றும் பணியை ஒப்பந்த முறையில் செய்து வருகிறார் இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் ஒரு மருமகம்பல் ஹரே கிருஷ்ணனை தாக்கி விட்டு தப்பி சென்று விட்டது, இதில் அவர் படுகாயமடைந்தார்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் நிலக்கரி சாம்பல் கழிவை அகற்றும் பணிக்காக ஒப்பந்தம் எடுப்பது குறித்து உண்டான பிரச்சனையின் காரணமாக, ஹரிகிருஷ்ணன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்ற உண்மை தெரியவந்தது.
தொடர்ச்சியாக தாக்குதல் குறித்து சென்னை, திருவொற்றியூர், தண்டையார்பேட்டை மற்றும் எடப்பாளையம் பகுதிகளை சேர்ந்த ரமேஷ், தனிகாசலம், துரை, மூர்த்தி மற்றும் ஷங்கர் உள்ளிட்ட 5️ பேர் நேற்று காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.