போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜித்தின் துணிவு படத்தின் டிரைலர் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. . இந்நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு விஜயின் வாரிசு படத்தில் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.
வாரிசு படத்தின் டிரைலரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில், அஜித் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக துணிவு படம் ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார். இது அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.