விமானத்தை பொறுத்த வரையிலும் அங்கே எவ்வளவு பெரிய விஐபிகளாக இருந்தாலும் சரி எல்லோருக்கும் ஒரே விதிமுறைதான் பின்பற்றப்படும்.
சாதாரண பயணியிடம் எப்படி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதோ, அதேபோலத்தான் பல விஐபிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
விமானத்தில் ஏறிவிட்டால் சாதாரண பயணி அல்லது விஐபி என்று எந்த விதமான பாகுபாடும் காட்டப்படாது.
ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த சக பெண் பயணி ஒருவர் மீது ஒரு நபர் சிறுநீர் கழித்த அதிர்ச்சி சம்பவம் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் அந்த மது போதையில் இருந்த பயணியின் மீது ஏர் இந்தியா நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்ற நவம்பர் மாதம் 26 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிAI 102 என்ற விமானம் வந்திருக்கிறது.
இந்த விமானத்தின் பிசினஸ் வகுப்பு இருக்கையில் ஒரு நபர் மது போதையில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் மதிய உணவுக்கு பிறகு விமானத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு விமானம் நடு வானத்தில் பறந்து கொண்டு இருந்தது. அப்போது மது பாதையில் இருந்த அந்த ஆசாமி 70 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி மீது சிறுநீர் கழித்துள்ளார்.
அந்த போதை ஆசாமியின் இந்த செயல் அங்கு இருந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அத்துடன் சக பயணி ஒருவர் அந்த நபரை அங்கிருந்து நகர்ந்து செல்லுமாறு அதட்டும் வரையில் அப்படியே நின்று கொண்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக விமான உதவியாளர்களிடம் அந்த மூதாட்டி புகார் வழங்கியுள்ளார். ஆனால் அவர்கள் எதுவும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டி கோபத்துடன் ஏர் இந்தியா குழும தலைவர் சந்திரசேகரனுக்கு தன்னுடைய ஆதங்கத்தை கடினம் மூலமாக புகாராக வழங்கினார்.
இந்த சம்பவம் நடைபெற்று சுமார் 45 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், அந்த நபர் அடுத்த 30 நாட்கள் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்படுவதாக ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து ஏர் இந்தியா நிர்வாகத்திடம் விமான போக்குவரத்து ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. சரியான விளக்கம் கிடைத்த பிறகு அந்த நபர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று விமான போக்குவரத்து ஆணையம் உறுதி அளித்திருக்கிறது.