தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே உள்ள இளங்காடு பகுதியில் தியாகராஜன் என்ற நபருக்கு 29 வயதில் ஆனந்தன் என்ற மகன் இருந்துள்ளார்.
கடந்து சில மாதங்களுக்கு முன் தியாகராஜனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார். தந்தை இறந்த காரணத்தால் ஆனந்தன் மிகவும் மன உளைச்சலில் காணப்பட்டார். இதனை தொடர்ந்து அவரது இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் இருந்து வந்த ஆனந்தன் நேற்று முன்தினம் எலி மருந்தை மதுவில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆனந்தனை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் ஆனந்தன் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினர் இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தந்தை இறந்ததால் மகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.