fbpx

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியானது விஜயின் வாரிசு திரைப்படம்…! ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்…?

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின்போது அஜித் நடிப்பில் வெளியான வீரம் திரைப்படமும், விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ஆனால் அதுவரையில் அஜித், விஜய் உள்ளிட்ட இருவரும் நடிப்பு ஜாம்பவான்கள் நடித்த திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியானது இல்லை என்றே சொல்லப்படுகிறது.

ஆனால் அந்த 2 திரைப்படங்களுமே ரசிகர்களிடையே வெற்றிகரமாக ஓடியது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில் தான் 9 வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் பொங்கல் வெளியீடாக அஜித் நடித்திருக்கும் துணிவு திரைப்படமும், விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகியிருக்கிறது.

இன்று காலை முதலே அஜித் நடித்திருக்கும் துணிவு திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது. சமூக வலைதளங்களை திறந்தால் போதும் அஜித் ரசிகர்களின் ஆரவாரம் தான் தென்படுகிறது.

ஆனால் வாரிசு திரைப்படத்திற்காக விஜய் ரசிகர்கள் பெரிய அளவில் எந்த விதமான ஆரவாரமும் செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் விஜயின் வாரிசு திரைப்படத்தின் மீது அவருடைய ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தார்கள்.

வெற்றிகரமாக இன்று அதிகாலை 4 மணி அளவில் முதல் காட்சியை பார்க்க காத்துக் கொண்டிருந்த விஜய் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் முழுமையான திருப்தியை தரவில்லை என்றே கூறப்படுகிறது.

அதாவது, அதிரடி காட்சிகள், சென்டிமென்ட் காட்சிகள், நகைச்சுவை காட்சிகள் என்று எல்லாம் இருந்தாலும் கூட, ஏதோ ஒரு வகையில் இது விஜய் திரைப்படம் இல்லை என்று ரசிகர்களிடையே ஒரு கருத்து இருக்கத்தான் செய்கிறது.

ஏற்கனவே சென்ற வருடம் வெளியான பீஸ்ட் திரைப்படம் விஜய் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்து சென்றது. இந்த நிலையில், தற்சமயம் மறுபடியும் வாரிசு திரைப்படம் விஜய் ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்துவிட்டதா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ஆனால் வாரிசு திரைப்படம் முழுக்க, முழுக்க குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் என்பதால் இனி வரும் நாட்களில் குடும்ப கதைகளின் ரசிகர்கள் திரையரங்குக்கு படையெடுக்க தொடங்கலாம் ஆகவே எதிர்வரும் நாட்களில் வாரிசின் விமர்சனத்தில் மாறுதல் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது என்ன நடக்கும்? பொறுத்திருந்து பார்க்கலாம்.

Next Post

திரையரங்கில் ஒளிபரப்பான ரஞ்சிதமே பாடல்….! கடைசி வரிசையை திரும்பிப் பார்த்த ரசிகர்கள்….!

Wed Jan 11 , 2023
பொதுவாக சினிமா பிரபலங்கள் திரையரங்குக்கு சென்று ரசிகர்களுடன் அமர்ந்து தங்களுடைய திரைப்படத்தை பார்ப்பதில்லை என்றே பெரும்பாலும் சொல்லப்படும். ஆனால் நடிகர் விஜய் அப்படியல்ல, நடிகர் விஜய் பல சமயங்களில் தன்னுடைய ரசிகர்களுக்கே தெரியாமல் அவர்களுடன் அமர்ந்து படம் பார்த்து இருக்கிறார். சென்னை காசிமேடு பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் பலமுறை அவருடைய திரைப்படங்களை அவர் ரசிகர்களுக்கே தெரியாமல் அவர்களுடன் அமர்ந்து பார்த்து இருக்கிறார் என்று அந்த திரையரங்கின் உரிமையாளரே ஒரு […]
நாளை வெளியாகும் வாரிசு படத்தின் 2-வது பாடல்..!! இது விஜய்க்கு முக்கியமான நாள்..!! எதனால் தெரியுமா?

You May Like