விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள அத்திக்கோயில் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் வனராஜ் (50) எனபவர் வசித்து வருகிறார். இவர் இரண்டாவது திருமணமாக ஏசுராணி (எ) உமா என்பவரை திருமணம் செய்துள்ளார். ஏசுராணியின் இரண்டாவது கணவர் வனராஜ். இருவரும் முதல் திருமணத்தில் பிறந்த 2 பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சங்கர் ராஜா என்பவருக்கு சொந்தமான எஸ்டேட்டில் குடும்பத்துடன் தங்கி கான்சாபுரம் அத்திகோவில் காவலாளியாக வனராஜ் பணியாற்றி வருகிறார். வனராஜ் மற்றும் அவரது மனைவி இருவரும் இரவில் மோட்டார் அறையின் மாடியில் தங்கியுள்ளனர். காலையில் எழுந்து பார்த்தபோது ஏசுராணி உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து வனராஜ் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உமாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாவட்ட காவல் ஆய்வாளர் வத்திராயிருப்பு ஆறுமுகம் சம்பவ இடத்துக்குச் சென்று இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக கொமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து உமாவின் கணவர் வனராஜிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. வனராஜ் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: இரவு தங்கியிருந்த இடத்தில் நானும், எனது மனைவியும் மது அருந்திவிட்டு உடலுறவு கொண்டிருந்தோம். அப்போது உடலுறவு கொள்ள முடியவில்லை.
இதனால் டார்ச் லைட்டை அந்தரங்க உறுப்பில் வைத்து அழுத்தி விட்டேன். இதன் விளைவாக ரத்தம் வெளியேறி என் மனைவி இறந்துவிட்டாள். இதனையறிந்த காவல்துறையினர், கொலை வழக்காக பதிவு செய்து, வனராஜை கைது செய்தனர். அத்துடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.