ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் திருமணமான பெண் காதலனால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் கட்ட தகவல்களில், டெல்லியைச் சேர்ந்த திருமணமான பெண் மம்தா தேவி மற்றும் அர்மான் கான் என்பவருக்கு இடையே பல ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்துள்ளது.
இதற்கிடையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அர்மான் கானுடன் பேசுவதை தேவி தவிர்த்துள்ளார். ஆனால், அர்மான் கான் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால், ஜனவரி 14ஆம் தேதி டெல்லியில் உள்ள தனது சகோதரி ஜெயாவின் வீட்டிற்கு தேவி சென்றுள்ளார்.
ஜனவரி 15 அன்று, ஜெயாவும் அவரது கணவர் நிகில் குஷ்வாஹாவும் தேவியை வீட்டிலேயே இருக்குமாறு கூறிவிட்டு, அவர்கள் இருவரும் சந்தைக்கு சென்றுவிட்டனர். மீண்டும் திரும்பி வந்த பிறகு, தேவி ரத்த காயங்களுடன் கிடந்தார். இதையடுத்து ஜெயா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு மருத்துவர்கள் தேவி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனால் ஜெயா போலீசில் புகார் அளித்தார். புகாரில் அர்மான் கான் தனது சகோதரியை தொடர்ந்து பேசுமாறு துன்புறுத்தி வந்ததாகவும், என்னையும் செல்போனில் தொடர்பு கொண்டு தேவியை அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவர் கூறியதை மறுத்ததால் என்னை கொன்று விடுவதாகவும் மிரட்டி, தற்போது தேவியை கொன்று விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே அர்மான் கான் தலைமறைவாகி உள்ளார்.