ராஜஸ்தான் மாநில பகுதியில் உள்ள ஸ்ரீ கங்கா மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் தாய் சுனிதா(Sunita) தனது மகளான கரண் என்ற சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர் காதலர் சன்னியின் உதவியுடன் ஒரு பெட்ஷீட்டில் சிறுமியின் உடலை போர்த்தி உருட்டி ஸ்ரீ கங்காநகர் ரயில் நிலையத்திற்கு எடுத்து சென்றிருக்கிறார்.
காலை 6:10 மணிக்கு புறப்பட்ட ரயிலில் ஏறிய இருவரும் , ஃபதுஹி ரயில் நிலையத்திற்கு முன் உள்ள கால்வாயில் உடலை வீச முயற்சி செய்துள்ளனர். உடலை வீசிய நிலையில் கால்வாயில் விழாமல் ரயில்வே தண்டவாளத்தின் அருகிலேயே விழுந்துள்ளது.
இதனை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அன்று காலை சிறுமியின் உடல் மீட்கப்பட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். சுனிதாவிற்கு ஐந்து குழந்தைகள் இருக்கும் நிலையில், தற்போது இரண்டு குழந்தைகளுடன் தனது காதலன் சன்னியுடன் சாஸ்திரி நகரில் வசித்து வருகிறார்.
மற்ற மூன்று குழந்தைகள் அவரது கணவருடன் வசித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சுனிதா தனது மகளை கழுத்தை நெரித்து கொன்றதை ஒப்புக்கொண்டார்.
ஆனால், கொலைக்கான காரணத்தை தெரிந்து கொள்ள காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிபதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.