கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியில் உள்ள கல்வராயன் மலையை அடுத்த ஆவனூர் கிராமத்தில் வசிப்பவர் விவசாயியான பாக்யராஜ் எனபவர். இவரின் மனைவி மல்லிகா நிறை மாத கர்ப்பிணியான மல்லிகாவுக்கு கடந்த வியாழக்கிழமை மாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, அவரை சேராப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அந்த சமயத்தில் அங்கு மருத்துவர்கள் பணியில் இல்லாததால் செவிலியர்கள் பிரசவம் பார்த்தாக கூறப்படுகிறது.
பிறந்த குழந்தையானது சிறிது நேரத்திலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துள்ளது. அத்துடன் மல்லிகாவுக்கும் அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரசவத்தில் தாயும், சேயும் அடுத்தடுத்து உயிரிழந்ததால் அதிர்ச்சி அடைந்த மல்லிகாவின் உறவினர்கள் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் தாயும், சேயும் உயிரிழந்ததாக கூறுகின்றனர்.
மேலும், பணியில் இல்லாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி மருத்துவமனைக்கு முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.