அசாம் மாநிலத்தில் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்யும் ஆண்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் “ அசாமில் தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.. குழந்தை திருமணங்களே இதற்கு முதன்மையான காரணம் ஆகும். தடைசெய்யப்பட்ட வயதில்’ மாநிலத்தில் சராசரியாக 31 சதவீத திருமணங்கள் நடைபெறுகின்றன.. எனவே இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது..

அதன்படி 14-18 வயதுடைய சிறுமிகளை திருமணம் செய்யும் ஆண்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும்.. அவர்கள் மீது இந்தச் சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். குழந்தை திருமணத்திற்கு எதிராக மாநிலம் முழுவதும் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது..
ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்படுவார், மேலும் தங்கள் பகுதியில் நடைபெறும் குழந்தைத் திருமணங்கள் குறித்து புகார் அளிப்பது கிராம பஞ்சாயத்து செயலாளரின் கடமையாகும்..” என்று தெரிவித்தார்.