fbpx

சொகுசு காரில் வந்த வடக்கன்ஸ்.. பிடித்து விசாரித்ததில்.. அதிர்ச்சி.!

நாமக்கல் பகுதி காவல்துறை ஆய்வாளர் சங்கர பாண்டியன் தலைமையில் நாமக்கல் To திருச்சி ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு சொகுசு கார் குஜராத் மாநில பதிவு எண்ணுடன் திருச்சி நோக்கி வந்துள்ளது.

அதை தடுத்து நிறுத்திய போலீசார் சோதனை செய்தபோது அந்த வாகனத்தில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அந்த வாகனத்தில் பயணித்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரேமா ராம் (வயது 28) பூபேந்திர சிங் (வயது 24) இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்னர்.

அதில் சொகுசு காரின் மூலமாக அவர்கள் பெங்களூரு பகுதியில் இருந்து திருச்சிக்கு குட்கா பொருட்களை கடத்திச் செல்வது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த கார் மற்றும் 5 லட்சம் மதிப்பிலான 300 கிலோ குட்கா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

பிரேமா ராம் மற்றும் பூபேந்திர சிங் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த குட்கா பொருட்கள் எங்கிருந்து பெறப்பட்டது? திருச்சியில் அதை யாருக்கு விற்பனை செய்ய இருந்தார்கள்? என்பது பற்றி காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Rupa

Next Post

திருமணமாகியும், தீராத ஆசை.. பள்ளி சிறுமியுடன் ஓயாது கடலை.. மனைவி காட்டிய அதிரடி.!

Wed Jan 25 , 2023
மதுரை பகுதியில் உள்ள வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அங்கே அவரது பாட்டி வீட்டிற்கு அருகில் வசித்து வரும் ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆதித்யா என்ற அந்த இளைஞருடன் அடிக்கடி செல்போனில் மாணவி பேசி வந்துள்ளார். ஆதித்யாவும் சிறுமியுடன் செல்போனில் கடலை போட்டு வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஆதித்யாவின் நண்பரான கார்த்திக் என்ற டூவீலர் […]

You May Like