திருமணம் செய்துகொண்டு தாய்மையை தழுவ பெண்கள் அதிக வயது வரை காத்திருக்க வேண்டாம் என அஸ்ஸாம் முதல்வர் கூறியுள்ளார்.
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கூறுகையில், திருமணம் செய்துகொண்டு தாய்மையை தழுவ பெண்கள் அதிக வயது வரை காத்திருக்க வேண்டாம். தாய்மையை வரவேற்பதற்கான “பொருத்தமான வயது” 22 முதல் 30 வயது வரை இருக்கும் என்று கூறினார்.
பெண்கள் தாயாக மாறுவதற்கு அதிக வயது வரை காத்திருக்கக்கூடாது, ஏனெனில் இது சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. தாய்மைக்கு ஏற்ற வயது 30 வயது வரை தான். இன்னும் திருமணம் ஆகாத பெண்கள் விரைவில் திருமணம் செய்ய வேண்டும்” என்று முதல்வர் ஹிமந்த சர்மா கூறி உள்ளார்.
ஆனால் அதே சமயம், பலரைப் போல பெண்கள் அதிக நேரம் காத்திருக்கக் கூடாது… எல்லாவற்றிற்கும் பொருத்தமான வயது இருக்கும் வகையில் கடவுள் நம் உடலைப் படைத்திருக்கிறார் என்றார்.