கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி இளம் பெண்ணிற்கு நடந்துள்ள துயர சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை அதிர்ச்சி யடைய செய்திருக்கிறது. பணத்திற்காக அவரது காதலனே கொலை செய்தது அந்தப் பகுதியில் பதட்டமான சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது.
சூளகிரியில் அடுத்த பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெரிகம் கிராமத்தை சேர்ந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான இளம் பெண் ஓசூரில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்துள்ளார். இவரை முதுகுறுக்கி கிராமத்தைச் சார்ந்த ஸ்ரீதர்(24) என்ற இளைஞர் காதலித்து வந்ததாக தெரிகிறது.
நேற்று மாலை ஸ்ரீதர், தான் காதலித்து வந்த பெண்ணின் தந்தையை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு மகளை தான் கடத்தி விட்டதாகவும் பத்து லட்ச ரூபாய் பணம் தரவில்லை என்றால் அவரின் பெண்ணை கொன்று விடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி யடைந்த பெண்ணின் தந்தை தன் உறவினர்களுடன் இணைந்து இரவு முழுவதும் மகளை தேடி இருக்கிறார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ராமன் தொட்டி என்ற இடத்தில் இளம் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு விரைந்த காவல்துறை சடலத்தை கைப்பற்றி விசாரித்ததில் மாயமான மாற்றுத்திறனாளி இளம் பெண் தான் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை காவல்துறை உறுதி செய்தது. இதனையடுத்து விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் அவரது காதலனான ஸ்ரீதர் தான் ஆள் இல்லா காட்டுப்பகுதிக்கு தனது காதலியை கூட்டி வந்து அவரை கொலை செய்திருக்கிறார் என்பதை உறுதி செய்தனர்.
ஆள் இல்லாத காட்டுப்பகுதிக்கு தனது காதலியை அழைத்து வந்த ஸ்ரீதர் அவரிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் பயந்த காதல் எனது உறவினர்களுக்கு தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்ளார். அப்போது பணம் கிடைக்காது என்ற சூழ்நிலையை உணர்ந்து கொண்ட ஸ்ரீதர் அவரை கொலை செய்திருக்கிறார். இது தொடர்புடைய ஆதாரங்களையும் செல்போன் உரையாடல்களையும் கைப்பற்றிய போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகை செய்து நீதி கேட்டு போராடி வருவதால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.