fbpx

அசத்தும் தமிழக அரசு…! மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு பயணம்…! புதிய செயலி அறிமுகம்…! முழு விவரம் உள்ளே…

அரசு பேருந்துகளின் இருப்பிடத்தினை ‘Chennai Bus App’ மூலம் அறிந்து கொள்ளும் சேவையை போக்குவரத்துத் துறை விரிவுபடுத்தியுள்ளது.

இது குறித்து, போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தற்போது மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டு பேருந்துகளின் பயண நேரம் மற்றும் வருகை போன்றவற்றை ‘சென்னை பஸ் செயலி’ மூலம் கைபேசியில் அறிந்து கொள்ள முடிகிறது. அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகத்தைத் தொடர்ந்து அனைத்து பேருந்துகளிலும் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டு பேருந்து செயலி மூலம் இச்சேவை விரிவுபடுத்தப்படவுள்ளது. இதன் மூலமாக அரசு விரைவுப்போக்குவரத்துக் கழக பேருந்துகள் வந்து கொண்டிருக்கும் இடம் மற்றும் குறிப்பிட்ட இடத்திற்கு எவ்வளவு நேரத்தில் வந்து சேரும் என்பதை எளிதில் தெரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

மேலும் பேருந்து தடம் குறித்த தேடல் பாதை விருப்பத்தையும் கிளிக் செய்து குறிப்பிட்ட வழித்தட எண்களில் இயங்கும் அனைத்து பேருந்துகளின் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். தேவையான தடத்தினை தேர்ந்தெடுத்து கிளிக் செய்வதன் மூலம் தற்போது அந்த தடத்தில் வருகின்ற பேருந்துகளின் விவரங்களை அறிந்து கொள்ளலாம். பேருந்தின் நிகழ்நிலை இருப்பிட விவரத்தின் பகிர்வு (நேரலை இருப்பிடப் பகிர்வு) மூலமாகப் பயணம் செய்யும் பயணிகள் தங்கள் இருப்பிட விவரத்தினை பாதுகாப்புக் கருதி தங்களது உறவினர்களுக்கு குறுந்தகவல் மூலமாக அனுப்பும் வசதி உள்ளது.

பொங்கல் பண்டிகை..!! கூடுதலாக 2 நாட்கள் விடுமுறை..!! வலுக்கும் கோரிக்கை..!! தமிழக அரசு ஆலோசனை..!!

பயணிகள் தங்களது பயணம் குறித்த கருத்துகளை (Feed Back) பதிவு செய்து அனுப்பும் வசதியும் உள்ளது. மேலும், இச்செயலி மூலம் தனியாக பயணிக்கும் பெண் பயணிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்குப் பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ள ஏதுவாக அமையும்.

இச்செயலி மூலம் முன்பதிவு செய்த பயணிகளுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் அவர்களது முன்பதிவு செய்த பேருந்து எந்த இடத்தில் வருகிறது என்ற விவரத்தையும் அறியலாம். மேலும், அரசு விரைவுப்போக்குவரத்துக் கழக பணிமனை மற்றும் பேருந்து நிலையங்களில் பேருந்துகளின் வருகையினை முன் கூட்டியே அறிந்து அதற்கேற்ப புறப்பாட்டினை திட்டமிட இச்செயலி பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

29 வார கருவை கலைக்க அனுமதி கோரிய இளம்பெண்... உச்சநீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு...

Sat Feb 4 , 2023
29 வார கருவை கலைக்க அனுமதி கோரிய 20 வயது பெண் ஒருவருக்கு பிறக்க வேண்டிய குழந்தையை தத்தெடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. 29 வார கருவை கலைக்க அனுமதி கோரி 20 வயதாகும் மாணவி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் உயிருக்கு ஆபத்து நேராமல் […]

You May Like