இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோடி விழுப்புரம் மாவட்டத்தில் இந்த முறைப்படி திருமணம் செய்து கொண்ட நிகழ்வு அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் தந்திருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் யுனெஸ்கோ உதவியுடன் அமைக்கப்பட்ட சர்வதேச நகர் ஆகும். இங்கு பல்வேறு வெளிநாட்டினரும் வந்து தங்கி இருந்து இந்திய மற்றும் தமிழ் கலாச்சாரத்தினை அறிந்து கொள்வதோடு அங்கிருக்கும் சிறுவர்களுக்கு கல்வி மருத்துவம் உள்ளிட்ட உதவிகளையும் அளித்து வருகின்றனர். பல்வேறு வெளிநாட்டின் அறிந்து வந்து ஆண்டு கணக்காக தங்கி இருந்து செல்வது வழக்கம். அதேபோல ஆரோவில்லில் தங்கி இருந்த ஜோடி தான் ஆலன் மற்றும் லியோ . இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்களான ஆலன் மற்றும் லியோ கடந்த மூன்று ஆண்டுகளாக ஆரோவில்லில் தங்கி இருக்கின்றனர். இந்த ஜோடி கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆலன் ஆரோவில்லில் தங்கி விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார். லியோ அங்குள்ள மாற்றுத்திறனாளிகளின் பள்ளியில் ஆசிரியை அக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் இங்கு தங்கி இருந்த காலம் முதல் தமிழ் கலாச்சாரத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தங்களது திருமணத்தையும் தமிழ் கலாச்சார மரபில் இந்து முறைப்படி செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கிறது இந்த ஜோடி. இதனை முன்னிட்டு அவர்களது திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. அவர்களின் விருப்பப்படி தமிழ் கலாச்சார மரபில் இந்து முறைப்படி புது மாப்பிள்ளை பட்டு வேஷ்டி பட்டு சட்டை அணிந்து புதுப்பெண் லியோ பட்டு புடவை கட்டி வர இருவரும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்விற்கு வருகை தந்திருந்த அவர்களது உறவினர்களும் தமிழ் கலாச்சார முறைப்படி வேஷ்டி சேலை அணிந்து வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தமிழ் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட ஜோடியினர் இங்கேயே தங்கி இருந்து பணியாற்றி நமது பாரம்பரிய முறையை பின்பற்றி திருமணம் செய்து கொண்ட நிகழ்வு ஆரோவில் இருக்கும் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த செய்தி இணையதளங்களிலும் பத்திரிகைகளின் வாயிலாகவும் வெளியே பரவி தமிழ் மக்களையும் இந்தியர்களையும் பெருமிதம் கொள்ளச் செய்திருக்கிறது.