fbpx

பெரும் பரபரப்பு…! பாக்கிஸ்தானில் காவல்துறை அலுவலகத்தை தாக்கிய தீவிரவாதிகள்…!

பாக்கிஸ்தானில் காவல்துறைத் தலைவரின் அலுவலகத்தை அடையாளம் தெரியாத கனரக ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாக்கிஸ்தானின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான கராச்சி காவல்துறைத் தலைவரின் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத கனரக ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு மத்தியில் பாதுகாப்புப் படையினர் மீதான சமீபத்திய தாக்குதல் வெட்கக்கேடானது என எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கராச்சி காவல்துறை மா அதிபரின் தலைமை அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக கராச்சி காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கராச்சி காவல்துறைத் தலைவர் ஜாவேத் ஓடோ தனது ட்விட்டரில் தனது அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளானதை உறுதிப்படுத்தினார், ஆனால் பாதுகாப்புப் படையினர் கடுமையாக பதிலளித்ததாகக் கூறினார்.

Vignesh

Next Post

விற்பனை பத்திரம்‌ பெறாத நபர்கள் வரும் 21, 22, 23 ஆகிய தேதிகளில் பெறலாம்...! ஆட்சியர் அறிவிப்பு...!

Sat Feb 18 , 2023
வீடு, மனை ஒதுக்கீடு பெற்று முழுத்‌ தொகை செலுத்தி, விற்பனை பத்திரம்‌ பெறாத நபர்கள் அதனை பெற்றுக் கொள்ளலாம். இது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்‌, ஒசூர்‌ வீட்டு வசதி பிரிவு, தருமபுரி மாவட்டத்தில்‌ வீடு, மனை ஒதுக்கீடு பெற்று முழுத்‌ தொகை செலுத்தி, விற்பனை பத்திரம்‌ பெறாத ஒதுக்கீடுதாரர்களுக்கு 21-02-2023, 22-02-2023 மற்றும்‌ 23-02-2023 ஆகிய நாட்களில்‌ விற்பனை […]

You May Like