fbpx

“நைட்டு நல்லா தான் பேசிகிட்டு இருந்தான்…”! இறுதி ஆண்டு மருத்துவ மாணவர் தற்கொலை! காவல்துறை தீவிர விசாரணை!

நிஜாமாபாத் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் இறுதி ஆண்டு மாணவர் இறுதி ஆண்டு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. காவல்துறையினரின் தகவலின்படி 22 வயதான தசரி ஹர்ஷா என்ற மாணவர் தான் தற்கொலை செய்து இருக்கிறார். வெள்ளிக்கிழமை இரவு நண்பர்களுடன் அமர்ந்து நன்றாக சிரித்துப் பேசி விட்டு தனது அறைக்குச் சென்ற ஹர்ஷா அதன் பிறகு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என காவல்துறையை அறிவித்திருக்கிறது.

இரவு உணவிற்குப் பின் தனது அறைக்குச் சென்ற ஹர்ஷா காலை வெகு நேரம் ஆகியும் வராததால் அவரது நண்பர்கள் சென்று பார்த்தபோது அவர் தற்கொலை செய்திருப்பது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த மாணவர் ஹர்ஷா சிந்தகுடா என்ற கிராமத்தைச் சார்ந்தவர். இவரது தந்தை ஸ்ரீனிவாசன் வளைகுடா நாடுகளில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rupa

Next Post

சொந்த அம்மாவே தனது 11 வயது மகனை கொன்று கால்வாயில் வீசிய கொடூரம்! கள்ள காதல் விளைவு!

Sat Feb 25 , 2023
தனது கணவரின் சகோதரருடன் ஏற்பட்ட தவறான உறவினால் பெண் ஒருவர் தனது 11 வயது மகனை கொலை செய்து அருகில் இருந்த கால்வாயில் வீசிய சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை அதிரசெய்திருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷிகோஹாபாத் என்ற இடத்தில் பழ வியாபாரம் செய்து வருபவர் முக்கிம். இவரது மனைவி பர்சானா. இவர்களுக்கு 11 வயதில் ஜீசான் என்ற மகன் இருந்தான். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தனது மகனை காணவில்லை என்று […]

You May Like