fbpx

இந்தியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுமா..? வைரலாகும் தகவல்.. உண்மை என்ன..?

இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் இன்று 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என்று ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது.

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால், ஏராளமான கட்டிடங்கள் விழுந்து தரைமட்டமாகின.. பேரழிவை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கம் காரணமாக துருக்கி மற்றும் சிரியாவில் 50,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உலகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.. இதனால் உலகம் முழுவதும் நிலநடுக்கம் பற்றிய கவலை ஏற்பட்டுள்ளது..

இதனிடையே இந்தியாவிலும் மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இமயமலைப் பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (NGRI – National Geophysical Research Institute) கணித்தது.

இந்நிலையில் நாகாலாந்து மாநிலத்தில் இன்று (பிப்ரவரி 26) 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலநடுக்கம் மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் மையமாக கொண்டு ஏற்படும் என்றும், இது 31 வினாடிகள் நீடிக்கும் என்றும் கூறியுள்ளது. இருப்பினும், நாகாலாந்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த தகவல் போலியானது என்று தெரிவித்துள்ளது.. மேலும் எந்த அறிவியல் ஆதாரமும் இல்லாமல் பரவும் இந்த கூற்று ஆதாரமற்றது என விளக்கமளித்துள்ளது..

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்தி, அரசாங்க அங்கீகாரம் பெற்ற அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டது அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளது. எனவே பொதுமக்கள் பீதியடைய வேண்டாம், ஆனால் எச்சரிக்கையுடன் இருக்கவும், நிலநடுக்கங்கள் தொடர்பாக அவ்வப்போது வெளியிடும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தி உள்ளது..

நாகாலாந்து மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட பிற வடகிழக்கு மாநிலங்கள் நில அதிர்வு மண்டலம் மற்றும் நிலநடுக்கத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய டெக்டோனிக் தட்டு எல்லையில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

குக் வித் கோமாளியிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார்………?

Sun Feb 26 , 2023
ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருந்த கூக்குவித்து கோமாளி சீசன் 4 தற்சமயம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வி.ஜே விஷால், விசித்திரா, ஷெரின், காளையன், ராஜ் ஐயப்பா,ஸ்ருஷ்டி போன்ற திரை உலக பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்று கொண்டுள்ளனர். ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் இருந்து இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் வெளியேறி விட்டார். இந்த நிலையில், இந்த வாரம் நடைபெற்றுள்ள குக் வித் கோமாளி எலிமினேஷன் சுற்றிலிருந்து வெளியேறப் போவது யார்? […]

You May Like