fbpx

தமிழ்நாடு, கர்நாடக மாநிலத்தில் தலா 4 மிதக்கும் கப்பல் தளத்துக்கு அனுமதி…!

நாட்டின் பொருளாதார சூழலை வலுப்படுத்த சாகர்மாலா திட்டத்தின் கீழ், கடல்சார் தொழில்துறையை மேம்படுத்த ஏராளமான சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதுவரை சாகர்மாலா திட்டத்தின் கீழ் கர்நாடகத்தில் மொத்தம் 11 மிதவை இறங்கு தளங்களை அமைக்க அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த தளங்கள் குருபுரா, நேத்ராவதி ஆறுகளில் அமைக்கப்பட்டு சுற்றுலா நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படும். கூடுதலாக தமிழ்நாட்டில் 4 மிதவை இறங்கு தளங்களுக்கு கொள்கை அடிப்படையில் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவின் ஆன்மீக தலமான ராமேஸ்வரத்தில் அக்னிதீர்த்தம், வில்லூண்டி தீர்த்தம் ஆகிய இடங்களில் இவை அமைக்கப்பட உள்ளன.

மேலும் கடலூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய இடங்களிலும் இந்த இறங்கு தளங்கள் அமைக்கப்பட உள்ளன.இந்த மிதவை இறங்கு தளங்கள் சுற்றுலாப் பயணிகள் தடையின்றியும், பாதுகாப்பாகவும் போக்குவரத்தை மேற்கொள்ளவும், கடலோர சமுதாயத்தினரின் ஒட்டுமொத்த மேம்பாட்டைக் கருத்தில் கொண்டும் அமைக்கப்படும்.

Vignesh

Next Post

அனைத்து ஆவணங்களிலும் ஒரே மாதிரி விவரங்கள்!... விரைவில் ஆதாரில் புதிய சேவை!... மத்திய அரசு தகவல்!

Tue Mar 14 , 2023
அனைத்து ஆவணங்களிலும் ஒரே மாதிரியான விவரங்களை கொண்டிருக்கும் வகையில் ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றங்கள் செய்தால், அந்த மாற்றங்கள் தானாகவே மற்ற ஆவணங்களிலும் புதுப்பிக்கப்படும் புதிய சேவையை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரவுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆவணங்களிலும் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களில் ஏதேனும் ஒரு பிழை போன்ற மாற்றங்கள் இருக்கும். இந்த விவரங்களை திருத்துவது கடினம் என்பதால், விவரங்களை மாற்ற ஒவ்வொரு ஆவணத்திற்கும் வெவ்வேறு […]

You May Like