கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பிறகு, இந்தியாவில் இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஆகியவை பொதுவானதாகிவிட்டன.. கோவிட் தொற்றுநோய் இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய பிறகு, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலின் H3N2 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.. இதனால், நாட்டில் பரவலாக சளி, இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.. தற்போது இந்தியாவில், இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு 5 நோயாளிகளில் ஒருவர் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் இன்ஃப்ளூயன்ஸா பி பாதிப்பு பரவல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.. டெல்லியின் 3 பெரிய ஆய்வகங்களில் சோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் பகுப்பாய்வு, ஜனவரி மாதத்தில், சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5% நோயாளிகளில் இன்ஃப்ளூயன்ஸா பி இருப்பது கண்டறியப்பட்டது, பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 10 சதவீதமாக உயர்ந்தது. மார்ச் மாதத்தில் 40 சதவீதம் என்று அதிகரித்துள்ளது. அதாவது இருமல், சளியால் பாதிக்கப்பட்ட 10 பேரில் 4 பேருக்கு இந்த வைரஸ் உள்ளது.
இந்தியா மற்றும் டெல்லி என்சிஆர் ஆகிய இடங்களில் H3N2 வைரஸின் பாதிப்ப்பு மெதுவாகக் குறைந்து வருவதால், இன்ஃப்ளூயன்ஸா பி வகை வைரஸ் தற்போது அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. பொதுவாக 4 வகையான, இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் மனிதர்களை பாதிக்கின்றன. அவை A, B C, மற்றும் D ஆகும். இன்ஃப்ளூயன்ஸா A ஐப் போலவே, இன்ஃப்ளூயன்ஸா B மனிதர்களுக்கு ஏற்படுகிறது மற்றும் இது ஒரு வகை பருவகால காய்ச்சலாகும். இன்ஃப்ளூயன்ஸா பி இன் மிகவும் பொதுவான அறிகுறிகள் இருமல், சளி, காய்ச்சல், மற்றும் உடல் வலி ஆகியவை ஆகும்.
இருப்பினும், இது ஒரு தீவிர நோயாக மாறாது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்ஃப்ளூயன்ஸா பி பாதிக்கப்பட்டால் வழக்கமாக, நோயாளிகள் குணமடைகிறார்கள், H3N2 சில சமயங்களில் கடுமையானதாக இருந்தாலும், இன்ஃப்ளூயன்ஸா B தீவிர தாக்கத்தை ஏற்படுத்தாது.. எனவே இன்ஃப்ளூயன்ஸா பி வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால், முதலில் யாரும் கவலைப்படத் தேவையில்லை, ஏனெனில் இது இன்ஃப்ளூயன்ஸா ஏ விட ஆபத்து குறைவானது என்றாலும், கவனமாக இருக்க வேண்டும்.. மருத்துவரின் ஆலோசனையுடன் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.. இன்ஃப்ளூயன்ஸா பி, கோவிட் தொற்றுநோயைப் போன்ற அதே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படவில்லை, ஆனால் ஒருவர் எப்போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து மருத்துவர்களின் ஆலோசனையின்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.