fbpx

“அச்சோ பாவம்…..” குட்டி பப்பி நாயை அடித்தே கொன்ற தந்தை! வைரலாகும் வீடியோ!

மத்திய பிரதேச மாநிலத்தின்குவாலியர் நகரில் நாய்க்குட்டியை இளைஞர் ஒருவர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கின்றன. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை குற்றவாளியை தேடி வருகிறது.இந்தச் சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரில் உள்ள ஹரி ஷங்கர்புரம் என்ற இடத்தில் நடைபெற்று இருக்கிறது. இந்த வரிசங்கர்புரம் ஜான்சி ரோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதாகும். இந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நாய்க்குட்டி ஒன்றை தன் கையில் வைத்திருக்கும் குச்சியால் அடித்து கொலை செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது அந்த நாயினை கொன்ற நபர் யார்? என்று விபரம் தெரிய வந்திருக்கிறது.

அந்த நபரின் பெயர் வீரேந்திர ஜோ என்பதும் தற்போது தெரிய வந்திருக்கிறது. அந்த நபரின் மீது விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து அந்த நபர் தலைமறைவாகி இருக்கிறார். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அந்த வீடியோவில் தான் அந்த நாய்க்குட்டியை கொலை செய்ததை நியாயப்படுத்தும் வகையிலும் அந்த இளைஞர் பேசியுள்ளார். இது தொடர்பாக பேசியிருக்கும் அந்த நபர் நாய்க்குட்டி என் மகளைக் கடித்ததால் தான் அதனை கொன்றேன் என தெரிவித்துள்ளார். இச்சம்பவம் விலங்கு ஆர்வலர்களிடமும் பொதுமக்களிடமும் மிகுந்த அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. வாயில்லாத ஒரு ஜீவனை இப்படி இரக்கமில்லாமல் அடித்துக் கொள்ளும் சம்பவம் மக்களிடம் அதிர்ச்சியும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Rupa

Next Post

உன்னோட சேர்த்து 6 பேரு......" இளம் பெண்ணுடன் உல்லாசம்! காரியம் முடிந்ததும் கைகழுவிய ராணுவ வீரர்!

Sat Mar 25 , 2023
தன்னை காதலித்து ஏமாற்றி விட்ட ராணுவ வீரருடன் இளம்பெண் பேசும் ஆடியோ தற்போது ஆரணி பகுதியில் வைரலாகி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கிருஷ்ணபுரம் என்ற பகுதியைச் சார்ந்தவர் மதன்குமார் வயது 25. இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பணியில் இருக்கிறார். இவர் ஆரணி அருகே உள்ள ஏந்துவாம் என்ற கிராமத்தைச் சார்ந்த ஷகிலா என்ற பெண்ணை […]

You May Like